சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் கொடுங்குளம் கிராமத்தில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கரடு முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவ்வப்போது சில வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.