ஈரோடு மாவட்டம் காரணம்பாளையம் காவிரி ஆற்றில் அமைந்துள்ள தடுப்பணையில் இருந்து தொடங்கும் புகழூர் வாய்க்கால் கரூர் மாவட்டம் நொய்யல் முதல் தளவாபாளையம், வாங்கல் வரை செல்கிறது. இந்த வாய்க்கால் கரையில் உள்ள மண்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்து, அகலம் குறுகிவிட்டதால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களையும், இடுப்பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்துள்ள இந்த மண்சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.