அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் - ஸ்ரீமுஷ்ணம் சாலை குறவன் குட்டை பிரிவு சாலை மற்றும் விருத்தாசலம் சாலையை இணைக்கும் பாதையாக உள்ளது. இந்நிலையில் இந்த சாலை முற்றிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.