புதிய சாலை வேண்டும்

Update: 2026-08-16 13:54 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி மேட்டுத்தாங்கல் தெருவில் உள்ள சாலையில் சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் தேங்கிவிடுகிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கி நிற்கும் நீரால் அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, புதிய சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்