வெள்ளை வர்ணம் பூச வேண்டும்

Update: 2026-08-16 14:01 GMT

கரூர் மாவட்டம் எல்.ஜி.பி. நகர் விஸ்தரிப்பு மகாத்மா நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையில் உள்ள 8 வேகத்தடைகளிலும் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோருக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் திடீரென பிரேக் பிடிப்பதால் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க அனைத்து வேகத்தடைகளிலும் உடனடியாக வெள்ளை வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்