புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கச்சிரான்பட்டி பகுதிக்கு செல்லும் சாலை கடந்த 17 ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்துகளில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.