வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2026-10-04 10:11 GMT

கோவை பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி பச்சாபாளையம் ஊருக்கு தெற்கே தபால்தந்தி நகர், ரங்கா நகர், ஜெகநாதன் நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கள்ளியங்காட்டு அம்மன் கோவில் அருகே 3 சாலை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். ஆனால் அங்கு வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்