வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-10-04 11:46 GMT

கோட்டூர் கோணத்தில் இருந்து பிலாங்காலை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு பள்ளதில் மண்மூடி நிரப்பி உள்ளனர். ஆனால் சாலையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், கோட்டூர்கோணம்.

மேலும் செய்திகள்