சேதமடைந்த பாலம்

Update: 2026-10-04 10:56 GMT

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் இருந்து ஆளூர் செல்லும் பிரதான சாலையில் வெள்ளமண்ணோடை பகுதியில் உள்ளது. இந்த பாலம் கடந்த சில நாட்களாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்புச் சுவர்களும் முழுமையாக இடிந்து ஓடைக்குள் விழுந்து விட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையின் மீதுள்ள பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெக்ஸ், மேலப்பெருவிளை.

மேலும் செய்திகள்