சாலையில் வெள்ளைநிற பெயிண்ட் அடிக்க வேண்டும்

Update: 2026-10-04 11:18 GMT

அரக்கோணம் நகரின் பிரதான சாலையாக காந்தி ரோடு உள்ளது. இந்தச் சாலையில் வேகத்தடைகளின் மீது வர்ணம் பூசப்படாததால் விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. சாலையின் நடுவிலும் ஓரங்களிலும் வெள்ளைநிற பெயிண்ட் அடிக்கப்படாததால் வாகனங்கள் சீராக பாதையில் செல்ல முடியவில்லை. இரு வழி சாலையாக உள்ள பகுதிகளில் சாலை நடுவே தடுப்புச்சுவர் அமைத்தால் சீரான போக்குவரத்தை உறுதி செய்யலாம். தேவையான இடங்களில் சாலையில் எதிரொளிப்பான்களை பொருத்தினால் விபத்துகள் குறையும். நெடுஞ்சாலைத்துறையினர் உரிய ஆய்வு செய்து சீரான போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

-மணிகண்டன், அரக்கோணம். 

மேலும் செய்திகள்