நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட ராயன் தெரு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. அந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.