கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரெட்பீல்டு செல்லும் வழியில் வங்கி எதிரே சாலையில் குழி ஏற்பட்டு உள்ளது. அந்த குழியை முறையாக மூடாமல் கட்டிட கழிவுகளை கொட்டி வைத்து உள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலை குழியை மூட உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.