விபத்து அபாயம்

Update: 2026-10-04 11:52 GMT

 அருவிக்கரை அருகே புத்தன் கடை குருசடி முதல் அருவிக்கரை புண்ணியம் தச்சூர் வரை இணைப்பு சாலை உள்ளளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர் விபத்தில் சிக்கி உள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்படட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அர்ஜுன் ராம். மாத்தூர். 

மேலும் செய்திகள்