சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் இருந்து வைத்தியநாதன் சாலை இளையார் தெரு சந்திப்பை நோக்கி வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் மேம்பாலத்தில் இருந்து இறங்கி வரும் வாகனங்கள், இளையார் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளைத் தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.