மண் சாலை தார்சாலையாக மாற்றப்படுமா?

Update: 2026-08-16 14:02 GMT

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் - நொய்யல் சாலையில் இருந்து கரைப்பாளையம் பகுதிக்கு செல்லும் மண் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் அவ்வப்போது மண் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தாலும், சாலை தொடர்ந்து சேதமடைவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள மண் சாலையை மாற்றி புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்