புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே திருக்கட்டளை பகுதிக்கு புதுக்கோட்டை - ஆலங்குடி சாலை கேப்பறையில் இருந்து செல்லும் 3 கிலோ மீட்டர் தார்சாலை பழுதடைந்த நிலையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சாலையில் ஜல்லிக்கற்கள் மட்டுமே பரப்பப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.