திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் வழியாக பஞ்சப்பூர் செல்லும் பாலம் இடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. ரெட்டமலை வழியாக செல்லும் மாற்றுப்பாதை குண்டும், குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த மாற்றுப்பாதை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.