திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் கண்ணமங்கலம் முதல் போளூர் வரை புதிதாக தார் ஊற்றப்பட்டது. அந்தச் சாலையில் இரு புறமும் வெள்ளைக்கோடு, மத்திய ெவள்ளைக்கோடு போடவில்லை. தேவையான இடங்களில் போக்குவரத்துச் சிக்னல்கள் இல்லை. சாலையோரம் மண் அணைக்கவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து சாலையில் கோடுகள் போட வேண்டும். சாலையோரம் மண் அணைக்க வேண்டும்.
-கார்த்திக், கண்ணமங்கலம்.