வாலாஜா தாலுகா அலுவலகம் முன்பு மெயின் பஜாரில் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல தடை செய்யும் வகையில் அடுத்தடுத்து 2 இரும்பு தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன. அம்மா உணவகம் கட்டப்படும்போது கட்டிடத்தின் இருபுறமும் இந்த இரும்பு தடுப்பு வேலி போடப்பட்டன. இதனால் பல வருடங்களாக மக்கள் நடை பாதையை உபயோகப்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. வாலாஜா நகராட்சி அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அகற்றுவார்களா?
-அழகியசிங்கர், வாலாஜா.