கே.வி.குப்பத்தை அடுத்த கோவிந்தாபுரம், சேத்துவண்டை ஊராட்சிகள் சந்திக்கும் பகுதியில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை பிரியும் பகுதியில் புதிய சாலைக்கும், பழைய சாலைக்கும் இடைப்பட்ட குறுகிய தூரம் ஜல்லிக் குவியல்களை கொண்டு பரப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை ஜல்லிகள் பதம் பார்க்கின்றன. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், கே.வி.குப்பம்.