காங்கேயநல்லூர் கூட் ரோட்டில் தடுப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-16 15:23 GMT

காட்பாடியில் விருதம்பட்டு-சில்க் மில்லுக்கு இடையே உள்ள பஸ் நிறுத்தமாக காங்கேயநல்லூர் கூட்ரோடு உள்ளது. இந்த வழியாகத்தான் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, அக்சீலியம் பள்ளி, கல்லூரி என பல பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்துப் போலீசார் கூட்ரோட்டில் இருந்த வழியை தடுப்புகளை கொண்டு அடைத்து விட்டனர். எனவே விருதம்பட்டில் இருந்து அனைவரும் சில்க் மில் சென்று அங்கிருந்து திரும்பி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே காங்கேயநல்லூர் கூட்ரோட்டில் ஏற்கனவே இருந்தது போல வழியை ஏற்படுத்தி தடுப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல் கூட்டுறவு பயிற்சி மையம் எதிரே கொரோனாவுக்கு முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டது. இதுநாள் வரை அதை அகற்றவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

-வள்ளி, காந்திநகர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது