அரக்கோணம்-சோளிங்கர் ரோடு மற்றும் திருத்தணி ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலங்களிலும் அதன் ஏறும், இறங்கும் பகுதிகளிலும் மண் குவியல் அதிகமாக உள்ளது. மேம்பாலத்தில் குப்பைகளும் கிடக்கின்றன. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது மண் துகள்கள் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்பவர்கள் கண்களில் படுவதால் விபத்துக்கு ஆளாக நேரிடுகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மண் குவியல், குப்பைகளை அகற்ற வேண்டும்.
-குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.