வந்தவாசி இந்திராநகர் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி எதிரில் சாலையின் குறுக்கே 2 வேகத்தடைகள் உள்ளன. அதில் வெள்ளை அடிக்கவில்லை. இதனால் இரவில் வாகனங்களில் வருவோர் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது விபத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையில் வெள்ளை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.தமிழ்வாணி, இந்திராநகர்.