வேகத்தடை மீது வெள்ளைகோடுகள் போட வேண்டும்

Update: 2022-11-20 10:48 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் மெயின் ரோட்டில் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் ஒரு நாளைக்கு லாரி, பஸ், கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால் வேகத்தடையின் மீது வெள்ளை கோடுகள் போடாமல் உள்ளது. இரவில் வரும் கனரக வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாததால் வாகனங்கள் வேகமாக ஏறி இறங்கி கட்டுப்பாட்டை இழக்கின்றன. அந்த நேரத்தில் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாாிகள் வேகத்தடை மீது வெள்ளைக்கோடுகள் போட நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-இமான், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்