சிறுபாலம் சேதமாகி பள்ளம்

Update: 2025-08-03 17:15 GMT

ஆரணி பழைய பஸ் நிலைய வெளி வளாகத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேல் போடப்பட்ட சிறுபாலம் சேதமாகி திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் தினமும் வெளியே வரும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் சிக்குகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் கீழே விழுந்து ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆரணி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

-சிவானந்தம், ஆரணி. 

மேலும் செய்திகள்

சாலை வசதி