வேலூர் கோட்டையைச் சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கோட்டை நுழைவு வாயில் அருகே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நடைபாதையில் உள்ள தள கற்கள் உடைந்துள்ளன. முதியவர்கள் அந்த வழியாக நடந்து வரும்போது உடைந்து கிடக்கும் கற்களில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.