திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமம் எம்.ஜி.ஆர்.நகரில் கடந்த 6 ஆண்டுகளாக தார் சாலை அமைத்து தரவில்லை. இதுபற்றி கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சாலை வழியாக செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.
-மணிமாறன், வளையாம்பட்டு.