சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-30 16:25 GMT

வேலூர் விருத்தம்பட்டில் இருந்து தண்டலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலை வழியாகத்தான் அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இருந்தாலும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தவறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ரங்கராஜன், விருதம்பட்டு.

மேலும் செய்திகள்

சாலை பழுது