கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் இருந்து ரெட்டிபாளையம் வரை சாலை குறுகியதாக உள்ளது. அந்த வழியாக அரசு பஸ்சும், லாரியும் வந்தால் மாறி செல்ல சிரமமாக உள்ளது. புதுப்பேட்டை பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி ரெட்டிபாளையம் வரை சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இர்பான், கண்ணமங்கலம்.