ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ெரயில்வே போலீஸ் லைன் தெருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டினார்கள். ஆனால், அந்தத் தெருவை அதிகாரிகள் மீண்டும் சீரமைக்கவில்லை. நகராட்சி ஆணையரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இதனால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் செல்லும்போது தவறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே தெருவை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சலீம், அரக்ேகாணம்.