வாலாஜா தாலுகா முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லாலாப்பேட்டை பகுதியில் காஞ்சனகிரி மலையில் ஓசை எழுப்பும் வெள்ளைக்கல் பாறை உள்ளது. அந்த ெவள்ளைக்கல் பாறையை பார்க்க தினமும் பலர் 2, 4 சக்கர வாகனங்களில் வருகின்றனர். அதில் கல்மேல்குப்பம் வழியாக மலைக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த மலைப்பாதையை விரிவுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உமாபதி, லாலாப்பேட்டை.