பள்ளத்தை மூட வேண்டும்

Update: 2023-04-05 17:16 GMT

பள்ளிகொண்டா-குடியாத்தம் செல்லும் சாலையில் மழை நீர் கால்வாய் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் 80 சதவீத பணி நடந்துள்ளது. ஆனால் சில இடங்களில் 10 அடி நீளத்துக்கு அந்தப் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். அந்தப் பள்ளத்தில் மழைநீர், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தவறி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் மீதமுள்ள பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்