வேலூரை அடுத்த அரியூர் மின்வாரிய அலுவலகம் செல்லக்கூடிய மெயின் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கால் தவறி பள்ளத்தில் விழுந்து விடவும் அல்லது சிலாப்பில் உள்ள இரும்புக்கம்பிகள் கால்களை பதம் பார்த்து விடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரசேகரன், அரியூர்.