மண்டைக்காடு பேரூராட்சியில் காளிவிளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்றநிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷாஜின் சந்தோஷ்,காளிவிளை.