காட்பாடியில் அழகர் ஓட்டல் அருகில் 10 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின்போது கால்வாய் மேலே உள்ள நடைபாதை உடைந்து சேதமாகி விட்டது. உடைந்த நடைபாதையை சரி செய்ய இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து உடைந்த நடைபாதையை சீரமைக்க முன்வர வேண்டும். அந்தக் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகர்சாமி, காட்பாடி.