வாலாஜாபேட்டை கொளத்தேரி ரோடு தேசிய நெடுஞ்சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. அதன் எதிரே 400 மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை பழுதாகி தார் பெயர்ந்து விட்டது. தார் சாலை பழுதை சரி செய்யாததால் மண் சாலையாக காட்சியளிக்கிறது. மழைப் பெய்தால் சேறும் சகதியுமாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு முழுமையான தார் சாலையாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
-சம்பந்தம், வாலாஜாபேட்டை.