போளூர் தாலுகா பெரியகரம் கிராமம் கல்லாங்குத்தில் இருந்து நைனாவரம், குன்னத்தூர் கிராமங்களுக்கு செல்ல ஒரு வருடத்துக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அந்தத் தார் சாலை தரமற்றதாக அமைக்கப்பட்டதால் சமீபத்தில் பெய்த மழையால் சேதம் அடைந்து பெயர்ந்துள்ளது. நேற்று காலை அந்தப் பகுதியில் விவசாய நிலத்துக்கு விவசாயப் பொருட்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
-கோவிந்தராஜ், பெரியகரம்.