பாதியில் நிற்கும் தெரு சாலை பணி

Update: 2024-12-22 19:46 GMT

வேலூர் மாநகராட்சி 4-வது வார்டு செங்குட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் தெரு உள்பட பல்வேறு தெருக்களில் ஏற்கனவே இருந்த சிமெண்டு சாலையின் மேல் ஜல்லிக்கற்கள் பரப்பி 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்தத் தெருவில் தனியார் பள்ளி உள்ளது. அந்தத் தெரு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஜல்லிக்கற்கள் பரப்பி நடப்பதற்குக்கூட வசதி இல்லாமல் உள்ளது. 100 ஆண்டுகளாக மாடு விடும் போட்டி நடத்தி வரும் இத்தெருவில் பாதியில் நிற்கும் சாலை பணியை மாநகராட்சி விரைந்து முடிக்க வேண்டும்.

-பி.துரை, செங்குட்டை.

மேலும் செய்திகள்