வாலாஜா-அணைக்கட்டு சாலை வழியாக குடிமல்லூர், சாத்தம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, திருப்பாற்கடல் வரை இருசக்கர வாகனங்கள் அதிகளவில் பகலிலும், இரவிலும் சென்று வருகின்றன. அந்த சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் வாலாஜா பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வாலாஜா மேம்பாலம் அருகில் அணைக்கட்டு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-திருக்குமரன், அணைக்கட்டு ரோடு.