வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2024-12-01 19:57 GMT

அமிர்தி மெயின்ரோட்டில் கேசவபுரம் கிராமம் உள்ளது. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா தலமான அமிர்திக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்கிறார்கள். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிகளுக்கு அருகில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.சதீஷ்குமார், கேசவபுரம்.

மேலும் செய்திகள்