திருப்பத்தூர் நகரில் தெருக்களுக்கு செல்லும் சாலைகளில் போடப்பட்டுள்ள வேகத்தடைகள் சிறிதளவு உடைக்கப்பட்டு வாகனங்கள் வேகமாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வேகத்தடைகள் போடப்பட்டதற்கான எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. எனவே சேதப்படுத்தப்பட்டு உள்ள வேகத்தடைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்டாலின், திருப்பத்தூர்.