கரடு முரடான சாலை

Update: 2024-09-08 20:01 GMT

அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியப்பட்டு கிராமத்தில் இருந்து புளியமரத்தூர் செல்லும் சாலை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடாக உள்ளது. முறையான மண் சாலை வசதி கூட இல்லாமல் மலைக் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மலைக் கிராம மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மண் சாலையாவது அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்ககை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்வந்த், புளியமரத்தூர்.

மேலும் செய்திகள்