கண்ணமங்கலம் அருகில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் ரோடு தெரு, அக்ரகார தெரு பகுதிகளில் குடிநீர் வசதிக்காக சிறு மின்விசை தொட்டி உள்ளது.
அதற்காக அமைக்கப்பட்டுள்ள பம்ப் ஹவுஸ் கட்டிடம் பழுதடைந்துள்ளது. சிறு மின்விசை தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.
எனவே சிறுமின்விசை தொட்டியை பழுதுப்பார்த்து, ரோட்டுத்தெரு, பிராமணர் தெருவில் சிமெண்டு அல்லது தார் சாலை அமைக்க ேவண்டும்.
-சத்தியசீலன், கண்ணமங்கலம்.