கோவை கணபதி தனியார் ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. போக்குவரத்து விதிகளை மீறி எதிரெதிர் திசையில் வாகனங்களை சிலர் இயக்குவதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.