திருப்பூர், கோவையில் இருந்து கரூர் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் என முக்கிய நகரங்களுக்கும், பெருந்துறையில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களுக்கும் செல்ல காங்கயத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்ததாக காணப்படும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காங்கயம் பஸ் நிலையம் முதல் போலீஸ் நிலையம் வரையிலான பகுதிகளில், கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
குமார், காங்கயம்.