கடலூர் வண்டிப்பாளையம் அரசுப்பள்ளி எதிரே பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிந்ததும் பள்ளத்தை சரியாக மூடாமலும், சாலையிலேயே மணல் கொட்டப்பட்டும் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கியும், மணலில் வழுக்கியும் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளத்தை சரி செய்து மணலை அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.