பெரியசெவலை-திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையின் இருபுறமும் செடி, கொடிகள் சாலையை ஆக்கிரமித்த நிலையில் வளர்ந்து நிற்கின்றன. இதனால் அங்கு வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்தபடி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.