காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் ஏரிக்கரை சாலை பழுதடைந்து மிக மோசமாக உள்ளது. புதுப்பட்டு கிராமத்தில் இருந்து பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி சென்று வர இந்தச் சாலையை தான் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளிக்கு, வேலைக்கு சைக்கிளில் செல்வோரும், இதர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும்.
-சின்னபையன், புதுப்பட்டு.