கால்வாய் அடைப்பால் அசுத்தமாகும் சாலை

Update: 2022-08-05 09:57 GMT

திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சட்டநாயகன் தெருவில் உள்ள கால்வாய்கள் சரிவர தூர் வரப்படாமல் உள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அவ்வபோது பெய்து வரும் மழையால் மேடு பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கி வரும் மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் அடைப்பு காரணமாக கால்வாயுள்ள கழிவு நீருடன் சேர்ந்து தெருவில் உள்ள சாலையில் ஓடுகிறது. மழை நின்ற பிறகு சாலையெல்லாம் அசுத்தமாக கழிவு நீர் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, திருவண்ணாமலை

மேலும் செய்திகள்