தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-01-25 14:34 GMT

சேலம் நரசோதிப்பட்டியில் அழகு நாச்சியம்மன் நகரில் மண்சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறுவதால் வாகனங்கள் தடுமாறும் நிலை உள்ளது. இந்த சாலையை தார்சாலையாக மாற்றித்தரக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்